நவீன வசதிகளுடன் வள்ளுவர் கோட்டம் புதிய தோற்றத்தில் உருமாற்றம்!!

Photo of author

By Savitha

நவீன வசதிகளுடன் வள்ளுவர் கோட்டம் புதிய தோற்றத்தில் உருமாற்றம்!!

சென்னை வள்ளுவர் கோட்டம் நவீன முறையில் பொதுப்பணித்துறையால் புதுப்பிக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளுவர் கோட்டம் முழுவதும் திராவிட கட்டடக்கலை பிரதிவிக்கும் வகையில் 1974-76ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டதாகவும், பார்வையாளர்களுக்கு திருக்குறளின் பெருமையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் வள்ளுவர் கோட்டத்தினை அதன் அசல் கட்டமைப்பு மாறாமல், நவீன வசதிகளுடன் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், புதிய நூலகம், கலந்துரையாடல் வசதிகள், ஒலி-ஒளி காட்சி உணவகம் மற்றும் பொதுமக்களுக்கான பிற வசதிகளுடன் கலையரங்கம் நவீன முறையில் பொதுப்பணித்துறையால் புதுப்பிக்கப்பட உள்ளதாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது