மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளி விடுதலை!! தந்தை செய்த அதிர்ச்சி காரியம்!! 

Photo of author

By Amutha

மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளி விடுதலை!! தந்தை செய்த அதிர்ச்சி காரியம்!! 

Amutha

Accused of sexually harassing daughter acquitted!! Shocking thing done by the father!!

மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளி விடுதலை!! தந்தை செய்த அதிர்ச்சி காரியம்!! 

மகளை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதால்  தந்தை சோகமான முடிவை தேர்ந்தெடுத்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் விதிஷா நகரில் வசித்து வந்தஒரு  இளம்பெண் கடந்த மே மாதம் அந்த ஊரினை சேர்ந்த  6 பேருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறினார். அடுத்ததாக அந்த இளம்பெண்  கடந்த மே 25-ஆம் தேதி அந்த  தற்கொலை செய்து உள்ளார். இதன் காரணமாக  , நதேரன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு  சுதீப் தகத் என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு நடைபெற்று வருகையில் அந்த இளம்பெண்ணின் தந்தை கடந்த வியாழக்கிழமை தற்கொலை செய்துள்ளார். இதில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக 6 பேருக்கு எதிராக விதிஷா கோத்வாலி  காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் பற்றி  மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ரா கடந்த சனிக்கிழமை முறையான  விசாரணைக்கு உத்தரவிட்டார். அவர் கூறுகையில் , இளம்பெண் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்ததும் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. அடுத்ததாக அவர் தற்கொலை செய்ததும் தற்கொலைக்கு தூண்டியதாக அடுத்த வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.  அதில் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் நீதிமன்றத்தால் குற்றவாளி என கைது செய்யப்பட்ட சுதிப் தகத் விடுதலை செய்யப்பட்டதால் இளம்பெண்ணின் தந்தை மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என மந்திரி மிஸ்ரா கூறினார். மேலும் இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அடுத்ததாக நத்தேரன் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி, மற்றும் தலைமை காவலர் குற்றவாளிக்கு உடந்தையாக செயபட்டதாக கூறி கள பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.