தொடர்ச்சியாக அதை கேட்டு தொந்தரவு செய்த ஆணின் மீது ஆசிட் வீசிய பெண்!

தொடர்ச்சியாக அதை கேட்டு தொந்தரவு செய்த ஆணின் மீது ஆசிட் வீசிய பெண்!

கடந்த சில மாதங்களாகவே ஆண்கள் மீது பெண்கள் ஆசிட் வீசும் சம்பவம் வெளிவந்து கொண்டே இருக்கின்றது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் அந்த வகையில் தற்ப்போதும் ஒரு சம்பவம் வெளிவந்து உள்ளது.

 

பிஹார் மாநிலத்தில் சுபால் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அந்த வகையில் கிதாஹாரா கிராமத்தைச் சேர்ந்த ஸ்வர்னகர் இவருடைய மகள் பூஜாகுமாரி, இவர்கள் அதே கிராமத்தில் கஞ்சா வியாபாரம் செய்து வருகின்றனர். அர்ஜுன் முகியா என்ற வாலிபர் இவர்களிடம் வழக்கமாக கஞ்சா வாங்கி வந்திருக்கிறார்.

 

இந்த நிலையில் இவர் ஒரு நாள் கஞ்சா வாங்குவதற்கு வந்த போது இருவருக்கும் இடையில் மோதல் ஏற்ப்பட்டுள்ளது இதுகுறித்து கேட்டறியும் போது இவர் முன்னதாக வாங்கிய கஞ்சாவிற்கான பணத்தை கொடுக்கவில்லை என்பதால், பூஜா பணத்தை தருமாறு வற்புறுத்தியுள்ளார்.

 

இந்த நிலையில் இவர் பணத்தை கொடுக்காததால் பூஜா கடும் கோபம் அடைந்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் முகியா மீண்டும் கஞ்சா கேட்டு சென்று உள்ளார் பூஜா கஞ்சா கொடுக்க மறுத்துள்ளார் , இவர் மீண்டும் மீண்டும் அந்த பெண்ணிடம் கஞ்சா கேட்டு வற்புறுத்தியதால், அவள் முகியா மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த முகியாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்திய போது அவர், பூஜா குமாரியும் அவரது தந்தையும் தான் ஆசிட் விசீனர் என்று வாக்குமூலம் அளித்தார். இதன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கைது செய்வதற்காக சென்ற போது பூஜா பிடிபட்டார் அவரது தந்தை தலைமறைவானார். போலீசார் அவரது தந்தையை தேடும் முயற்ச்சியில் இறங்கியுள்ளனர் .

Leave a Comment