அதிரடி அறிவிப்பு!! இனி திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு!!
தமிழகத்தில் உள்ள திருநங்கைகளுக்கு இனி ரேஷன் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதற்கு தகுதி உடையவர்கள் மார்ச் 8 ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாழும் மக்களில் பெரும்பாலோனருக்கு மிக முக்கிய ஆவணமாக கருதப்படுவது இந்த ரேஷன் கார்டு ஆகும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவர் பெயரும் இணைக்கப்பட்டிருக்கும் இந்த ரேஷன் கார்டு ஒரு கட்டாய ஆவணம் ஆகும்.
இந்த ரேஷன் கார்டு மூலம் சாமானிய மக்கள் மலிவான விலையில் பொருட்களை வாங்கி வருகின்றனர்.இதனால் பலர் பயன் பெற்று வருகின்றனர்.இவ்வாறு பயனுடைய இந்த ரேஷன் கார்டு திருநங்கைகளுக்கு இல்லாமல் இருப்பது மிக தவறான ஒன்றாகும்.
இதனால் திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இது தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்ற 8 ம் தேதி பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திருநங்கைகளுக்கு தனி ரேஷன் கார்டு வழங்குவது குறித்து பேசப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டமானது சிறுவாக்கம் ,உத்திரமேரூர் ,வாலாஜாபாத் ,போந்தூர், குன்றத்தூர் போன்ற கிராமங்களில் நடத்தப்பட உள்ளது.
மேலும் இந்த பகுதி மக்கள் தங்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல் ,நீக்குதல் ,முகவரி மாற்றம் , புதிய குடும்ப அட்டை சேர்த்தல் , தொலைபேசி எண் மாற்றம் செய்தல் போன்ற பல கோரிக்கை மனுக்கள் வாங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதில் ரேஷன் கார்டு இல்லாத திருநங்கைகளுக்கு ,பழங்குடியினருக்கு, மற்றும் நரிக்குறவர் மக்களும் மனு அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அனைத்து குறைகளுக்கும் உடனடி தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார்.
இவற்றின் மூலம் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ரேஷன் கார்டு அவர்களுக்கு கிடைத்தால் மிகவும் பயனுள்ள வகையில் அமையும்.