கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்! காயம் இன்றி உயிர் தப்பினார்!!

0
31

கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்! காயம் இன்றி உயிர் தப்பினார்!!

 

இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரவீன் குமார் அவர்களும் அவருடைய மகனும் காயம் இல்லாமல் உயிர் தப்பியதாக தகவல் கிடைத்துள்ளது.

 

இந்திய அணியின் முன்னுள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் அவர்கள் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 68 ஒரு நாள் போட்டிகளிலும் 10 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 36 வயாதான வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார்.

 

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ, மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் லையன்ஸ் ஆகிய ஐந்து அணிகளுக்காக இவர் விளையாடியுள்ளார். இந்நிலையில் இவர் சென்ற கார் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.

 

பிரவீன் குமார் அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அதாவது ஜூன் 4ம் தேதி இரவில் பாண்டவ் நகரில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து முல்தான் நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு காரில் அவரது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது காவல் ஆணையர் இல்லம் அருகே வந்து கொண்டிருந்த சரக்கு லாரி கட்டுபாட்டை இழந்து பிரவீன் குமார் அவர்களின் காரின் பின் பக்கம் மோதியது. இந்த விபத்தில் பிரவீன் குமார் அவர்களும் அவருடைய மகனும் காயம் இன்றி உயிர் தப்பினர்.

 

இந்த விபத்து இரவு சுமார் 9.30 மணியளவில் நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிரவீன் குமார் அவர்களின் கார் விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு லாரி ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பிரவீன் குமார் அவர்கள் தற்போது மீரட்டில் உணவகத் தொழிலையும் ரியல் எஸ்டேட் தொழிலையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.