தெலுங்கு தேசம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விரக்தியில் மாநில தலைவர் எடுத்த திடீர் முடிவு!!

0
196
#image_title

தெலுங்கு தேசம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விரக்தியில் மாநில தலைவர் எடுத்த திடீர் முடிவு!!

நடக்கவிருக்கும் 5 மாநில தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடாது என்று அறிவித்ததை அடுத்து அந்த கட்சியின் மாநிலத் தலைவர் கசானி ஞானேஷ்வர் அவர்கள் திடீரென்று ஒரு முடிவு எடுத்துள்ளார்.

நவம்பர் மாதம் இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் மாதம் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்ட அறிவிப்பு கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடாது என்று திடீர் அறிவிப்பை அறிவித்தது. இந்த அறிவிப்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கட்சியின் மாநில தலைவர் கசானி ஞானேஷ்வர் திடீரென்று ஒரு முடிவை எடுத்துள்ளார்.

அதாவது தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாது என்று அறிவித்ததை அடுத்து தெலுங்கு தேசம் கட்சி மாநில தலைவர் கசானி ஞானேஷ்வர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Previous articleவெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்! என்ன செய்யப் போகிறது வங்கதேசம் !?
Next article70000 ரசிகர்களுக்கு விராட் கோஹ்லி மாஸ்க் வழங்க திட்டம்! அதற்கு காரணம் இதுதான்!!