மாநில அரசு ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! வெளியான அதிர்ச்சி தகவல்!!
மணிப்பூரில் அதிகமாக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதை பூர்வீக பழங்குடியினரான குக்கி சமூகத்தினர் எதிர்த்து வருகின்றனர்.
இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையே மே மாதம் மூன்றாம் தேதி அன்று மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 100 பேர் உயிரிழந்தனர். மேலும் 310 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் ஏற்பட்ட இந்த கலவரத்தில் அமைதியை நிலைநாட்ட ஆளுநர் தலைமையில் ஒன்றிய அரசு குழு அமைக்கப்பட்டது. ஆனாலும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இந்த கலவரத்தினால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
மேலும் இந்த கலவரத்தால் ஏராளமானோர் தங்களது அடிப்படை வசதிகளை இழந்து முகாம்களில் தங்கி வருகின்றனர். இதில் குறிப்பாக அரசு ஊழியர்கள் அனைவரும் கால வரையற்ற விடுப்பில் தங்கி வருகின்றனர்.
சிலர் வெளியூர்களில் இருப்பதாகவும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் இருந்த போதும் இவர்களுக்கான சம்பளம் தவறாமல் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதற்கு ஒரு முடிவு கட்டும் நிலையில், மாநில அரசு இவர்களுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு வர வேண்டும் இல்லையென்றால் ஊதியம் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளனர். அரசின் இந்த திடீர் அறிவிப்பால் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.