விஜய் ரசிகர் அடித்துக் கொலை.! கொரோனா நிவாரண நிதி பேச்சுவார்த்தையில் இருவர் மோதலால் நடந்த பயங்கர சம்பவம்!

Photo of author

By Jayachandiran

விஜய் ரசிகர் அடித்துக் கொலை.! கொரோனா நிவாரண நிதி பேச்சுவார்த்தையில் இருவர் மோதலால் நடந்த பயங்கர சம்பவம்!

கொரோனா நிவாரண நிதி யார் அதிகம் கொடுத்தது என்ற தகராறில் விஜய், ரஜினி ரசிகர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு உயிரிழப்பு.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி சந்திகாப்பான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் யுவராஜ் கூலி தொழில் செய்துவந்தார். விஜய் ரசிகரும் ஆவார். இவரது வீட்டின் அருகே இருக்கும் சமையல் தொழிலாளி ஒருவரின் மகன் தினேஷ்பாபு என்பவர் ரஜினி ரசிகர் ஆவார். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர்.

தினேஷ் பாபு (ரஜினி ரசிகர்)

ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருவரும் வீட்டில் இருந்தபோது, கொரோனா நிவாரண நிதி பற்றி விவாதம் நடத்தியுள்ளனர் குடிபோதையில் இருந்த இருவரும் யார் அதிகம் நிதி கொடுத்தது என்று பேசியபோது வாக்குவாதம் அதிகரித்து சண்டையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்பாபு நண்பன் யுவராஜை பலமாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைப்பார்த்த அவரது உறவினர்கள் மரக்காணம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யுவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து நண்பரை அடித்துக்கொன்ற தினேஷ் பாபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நடிகர்களுக்காக நண்பனையே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.