நெல்சன் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கிறார்!!! ஹீரோயின் யார்னு தெரியுமா!!?

0
159
#image_title

நெல்சன் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கிறார்!!! ஹீரோயின் யார்னு தெரியுமா!!?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கவுள்ள முதல் திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தின் இயக்குநர் யார், ஹீரோயின் யார் என்பது பற்றிய தகவல்களும் வெளியாகி இருக்கின்றது.

நட்புனான என்னனு தெரியுமா, லிப்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்து நடிகரான கவின் அவர்கள் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கிய டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து நடன இயக்குநர் சதீஸ் இயக்கும் திரைப்படத்தில் இயக்குநர் எலன் இயக்கும் ஸ்டார் திரைப்படத்திலும் நடிக்கிறார். இதையடுத்து தற்பொழுது நடிகர் கவின் அடுத்ததாக நடக்கவிருக்கும் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது.

அதன்படி இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் தயாரிப்பாளராக அறிமுகமாகும் அதாவது அவர் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களின் உதவி இயக்குநர் சிவபாலன் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் அதாவது 2024வது வருடம் முதல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. நடிகை பிரியங்கா மகன் ஏற்கனவே இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசை அமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

Previous articleநாங்கள் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை!!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அறிவிப்பு!!!
Next articleகோவில் ஸ்டைல் லெமன் ரைஸ்.. சுலபமான மற்றும் சுவையான செய்யும் முறை!!