நாங்கள் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை!!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அறிவிப்பு!!!

0
53
#image_title

நாங்கள் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை!!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அறிவிப்பு!!!

இன்று(செப்டம்பர்25) நடைபெற்ற அதிமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்  போவது கிடையாது என்று அதிகாரப்பூர்வமாக அதிமுக கட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று(செப்டம்பர்25) மாலை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.

சில வருடங்களாகவே அதிமுக கட்சிக்கும் பாஜக கட்சிக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகளும், கூச்சல் குழப்பங்களும், மோதல்களும் நிகழ்ந்து வந்தது. அதாவது தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறி வந்த சில கருத்துக்கள் அதிமுக கட்சியினரை வெறுப்படையச் செய்தது.

இதனால் அண்ணாமலை அவர்களை தமிழக பாஜக தலைமை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக கட்சியிடம் அதிமுக கோரிக்கை வைத்தது. ஆனால் பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பாஜக கட்சியுடன் அதிமுக கட்சிக்கு மோதல் நிலவி வந்தது. இதன் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதாக அதிமுக அறிவித்தது.

இதையடுத்து இன்று(செப்டம்பர்25) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கட்சியுடன் உள்ள உறவை முறித்துக் கொள்வதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஒரு மனதாக தீர்மானம் எடுத்தனர். இதையடுத்து அதிமுக கட்சியின் முக்கிய தலைவர். கே.பி.முனுசாமி அவர்கள் பாஜக கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வதாகவும் அவர்களுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை என்றும் அறிவித்தார்.

இதை அறிந்த அதிமுக தொண்டர்கள் அனைவரும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் இதை கொண்டாடி வருகின்றனர்.