கோவில் ஸ்டைல் லெமன் ரைஸ்.. சுலபமான மற்றும் சுவையான செய்யும் முறை!!

0
252
#image_title

கோவில் ஸ்டைல் லெமன் ரைஸ்.. சுலபமான மற்றும் சுவையான செய்யும் முறை!!

நம்மில் பலருக்கு கோவிலில் வழங்கப்படும் புளியோதரை,எலுமிச்சை சாதம்,தயிர் சாதம் என்றால்அலாதி பிரியம்.கோவிலில் தரப்படும் பிரசாதம் மட்டும் எப்படி இவ்வளவு ருசியாக இருக்கிறது என்று பலரும் நினைத்திருப்போம்.இப்படி கோவில் பிரசாதத்தை நினைக்கும் போதே வாயில் எச்சில் ஊரும் நிலையில் அவற்றை வீட்டில் செய்ய தெரிந்தால் எப்படி இருக்கும்? இத்தனை நாள் நாம் கோவிலில் வாங்கி சுவைத்து வந்த எலுமிச்சை சாதம் அதே சுவையில் செய்யும் ரகசியம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை சாறு – 1/2 டம்ளர்

*கடுகு,உளுந்து பருப்பு – 1 தேக்கரண்டி

*எண்ணெய் – 2 தேக்கரண்டி

*நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி

*தூள் உப்பு – தேவையான அளவு

*வறுத்த வேர்க்கடலை – 3 தேக்கரண்டி

*முந்திரி – 5

*கருவேப்பிலை – 1 கொத்து

*வர மிளகாய் – 6

*மஞ்சள் தூள் – 1 1/2 தேக்கரண்டி

*இஞ்சி – சிறு துண்டு

*வடித்த சாதம் – 1 பெரிய பவுல் அளவு

செய்முறை:-

1.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் கடலை எண்ணெய் அல்லது ரீஃபைண்ட் ஆயில் 2 தேக்கரண்டி மற்றும் நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி ஊற்றவவும்.அவை சூடேறியதும் கடுகு,உளுந்து பருப்பு சேர்த்து பொரிய விடவும்.

2.பிறகு அதில் வறுத்த வேர்க்கடலை மற்றும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.பின்னர் காய்ந்த வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

3.சிறு துண்டு இஞ்சி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

4.பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாற்றை அதில் சேர்த்து 15 வினாடிகள் வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.

5.அதில் வடித்து வைத்துள்ள சாதம் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மெதுவாக கிளறவும்.இந்த முறையில் செய்தால் கோவிலில் கொடுக்கப்படும் எலுமிச்சை சாதம் போல் சுவையாக இருக்கும்.