இந்திய கொடியுடன் இஸ்ரேல் கொடியா.. இடது சாரியை எதிர்க்க ஜெய் ஸ்ரீராம் முழக்க போராட்டம்! உச்சக்கட்டமாகும் பாஜகவின் அராஜகம்!! 

0
35
israel-flag-with-indian-flag-jai-sriram-slogan-protest-to-oppose-left-wing-bjps-anarchy-at-its-peak
israel-flag-with-indian-flag-jai-sriram-slogan-protest-to-oppose-left-wing-bjps-anarchy-at-its-peak

இந்திய கொடியுடன் இஸ்ரேல் கொடியா.. இடது சாரியை எதிர்க்க ஜெய் ஸ்ரீராம் முழக்க போராட்டம்! உச்சக்கட்டமாகும் பாஜகவின் அராஜகம்!!

உலகையே உலுக்கும் அளவிற்கு தற்பொழுது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் லட்சக்கணக்கான உயிர்களை பரிதாபமாக இழக்க நேரிட்டது. அந்த வகையில் பல நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

நமது இந்தியா ஆரம்பக் கட்ட காலத்திலிருந்து பாலஸ்தீனத்திற்கு தான் தங்களது ஆதரவை அளிக்கும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்பொழுது இஸ்ரே பக்கம் நிற்பதாக தெரிவித்தார். இதற்கு முன்னதாகவே தமிழகத்தில் வலதுசாரி இடதுசாரி என்று தனித்தனியாக போர் கொடிகள் இருக்கும் பட்சத்தில் இதனை ஒரு ஆயுதமாக எடுத்துக் கொண்டனர்.

அந்த வகையில் இந்தியாவில் இடதுசாரி சேர்ந்தவர்கள் பலர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்பதாக கூறி போராட்டத்தை ஆரம்பித்தனர். அதன் உச்சகட்டமாக பாலஸ்தீன கொடி போன்றவற்றை பறக்கவிட்டு போராட்டம் செய்தனர்.இது  அடுத்தடுத்து சர்ச்சை ஏற்படுத்தியது. இவ்வாறு போராடியவர்களை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு எதிராக வலது சாரியும் கிளம்பி விட்டது.மதுரையை சேர்ந்த இளைஞர்கள் நேற்று இந்திய தேசியக் கொடியுடன் இஸ்ரேல் கொடியையும் இணைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் மாதா கி ஜே, ஜெய்  ஸ்ரீராம் போன்ற கோஷங்களையும் எழுப்பி உள்ளனர். இதனை அறிந்த போலீசார் அந்த இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை செய்ததில் இந்த இளைஞர்கள் நால்வரும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளனர். இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போருக்கு வலதுசாரி மற்றும் இடதுசாரி என இருவரும் ஆதரவளித்து தங்களுக்குள் மோதிக் கொள்வது தற்பொழுது தீவிரமாகி வருகிறது.