நயன்தாராவுடன் இணைந்த கவின்.!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!!

Photo of author

By Vijay

நயன்தாராவுடன் இணைந்த கவின்.!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!!

Vijay

ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தற்போது, இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சில திரைப் படங்களை தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில், ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் கூழாங்கள், காத்துவாக்குல 2 காதல் ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் பிக்பாஸ் பிரபலம் கவின் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த படத்தில் நடிகை வாணி போஜன் கவினுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, நடிகர் கவின் நடித்துள்ள லிப்ட் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.