“செய்திகள் வாசிப்பது …” தமிழர்களின் இல்லங்களில் ஒலித்த குரல்… சரோஜ் நாராயணசாமி மறைவு

0
125

“செய்திகள் வாசிப்பது …” தமிழர்களின் இல்லங்களில் ஒலித்த குரல்… சரோஜ் நாராயணசாமி மறைவு

தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி இயற்கை எய்தியுள்ள செய்தி தமிழர்கள் மத்தியில் சோகத்தை எழுப்பியுள்ளது.

1980 மற்றும் 1990 களில் பல வீடுகளில் செய்தி தொடர்பு சாதனமாக இருந்தது ரேடியோதான். அதிலும் குறிப்பாக பலரும் காலையில் செய்தி கேட்பது அந்த பல நாள் கேட்டுப் பழகிய குரலுக்காகதான். “செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி” என்ற குரலோடு ஆரம்பிக்கும் அந்த செய்தி அறிவிப்பு தமிழர்கள் பலரின் மனதில் ஆழப் படிந்த ஒரு நினைவாகவே மாறியது.

ஆனால் தொலைக்காட்சிகளின் வருகை, 24 மணிநேர செய்தி சேனல்கள் ஆகியவற்றால் ரேடியா தங்கள் முக்கியத்துவத்தை இழந்தன. இன்றைய தலைமுறைக்கு சரோஜ் நாராயணசாமி யார் என்று கூட தெரிய வாய்ப்பில்லை.  30 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய வானொலியில் பணியாற்றிய அவர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவருக்கு 2009 ஆம் ஆண்டு கலைமாமணி விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அப்படி செய்திகள் வாசிப்பதன் மூலமாக தன் குரல் மூலமாகவே அனைவருக்கும் நெருக்கமானவரான சரோஜ் நாராயணசாமி நேற்று மறைந்துள்ளார். இது சம்மந்தமான செய்திகள் இணையத்தில் பரவி அவருக்கு பலரும் அஞ்சலியை பெற்றுள்ளன.