ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூரியா!!!

0
44
#image_title

ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூரியா!!!

பிரபல நடிகர் சூரியா அவர்கள் தன்னுடைய ரசிகர் ஒருவரின் வீட்டுக்கு நேரில் சென்று ரசிகருடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

நடிகர் சூரியா அவர்களின் பெயரில் ரசிகர்களால் நடத்தப்பட்டு வரும் சூரியா நற்பணி இயக்கத்தில் எண்ணூரை சேர்ந்த 24 வயதான அரவிந்த் அவர்களும் உறுப்பினராக உள்ளார். இவர் தீவிர சூரியா ரசிகர் ஆவார். அரவிந்த் அவர்கள் கடந்த செப்டம்பர் 24ம் தேதி எதிராபாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்த செய்தியறிந்து வேதனைப்பட்ட நடிகர் சூரியா அவர்கள் எண்ணூரில் இருக்கும் தனது ரசிகர் அரவிந்த் அவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று ரசிகர் அரவிந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மறைந்த ரசிகர் அரவிந்த் அவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் சூரியா தற்பொழுது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.