27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன லட்டு!!! திருப்பதி அல்ல வேறு எங்கு என்று தெரியுமா!!!

0
27
#image_title

27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன லட்டு!!! திருப்பதி அல்ல வேறு எங்கு என்று தெரியுமா!!!

ஹைதராபாத்தில் நடந்த கோயில் ஏலம் ஒன்றில் லட்டு ஒன்று 1000 ரூபாயில் தொடங்கி 27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாலபூர் பகுதியில் விநாயகர் கோயில் ஒன்று இருக்கின்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதே போல இந்த வருடமும் மிக பிரம்மாண்டமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வந்தது. இந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக சுத்தமான நெய் மற்றும் உலர்ந்த பழங்களைக் கொண்டு 21 கிலோ எடை கொண்ட லட்டு தயார் செய்யப்படும். பிறகு இந்த லட்டின் மீது தங்க முலாம் பூசப்படும். தங்க முலாம் பூசப்பட்ட லட்டை விநாயகர் முன் வெள்ளிக் கிண்ணத்தில் வைத்து பூஜை செய்வார்கள்.

பின்னர் பூஜை செய்யப்பட்ட லட்டை கோயில் நிர்வாகத்தினர் ஏலம் விடுகின்றனர். இதே போல 30 ஆண்டுகளாக பூஜை செய்யப்பட்ட லட்டு ஏலம் விடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த பிரம்மாண்டமான லட்டு பூஜைகள் எல்லாம் முடிந்து இன்று(செப்டம்பர்28) கோயில் நிர்வாகத்தினரால் ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் உள்ளூரை சேர்ந்த மற்றும் வெளியூரை சேர்ந்த 36 பேர் கலந்து கொண்டனர். இந்த பிரம்மாண்ட லட்டுக்கு ஆரம்ப விலையாக 1116 ரூபாயை கோயில் நிர்வாகத்தினர் நிர்ணயம் செய்தனர். விறுவிறுப்பாக ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த தசரி தயானந்த் ரெட்டி என்பவர் இந்த 21 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட லட்டுவை 27 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்து வாங்கியுள்ளார். கடந்த ஆண்டு விடப்பட்ட ஏலத்தில் 24.60 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதுதான் இது வரை அதிகபட்ச தொகையாக இருந்தது. இந்நிலையில் இந்த வருடம் நடைபெற்ற ஏலத்தில் தசரி தயானந்த் ரெட்டி 27 லட்சம் ரூபாய்க்கு லட்டை ஏலத்தில் எடுத்து வரலாறு படைத்துள்ளார்.

ஏலம் எடுத்த இந்த பிரம்மாண்ட லட்டுவை தனது பெற்றோர்களுக்கு பரிசளிக்கவுள்ளதாக தசரி தயானந்த் ரெட்டி அவர்கள் கூறினார். 1994ம் ஆண்டு இதே போல நடைபெற்ற பிரம்மாண்ட லட்டு ஏலத்தில் விவசாயி ஒருவர் 450 ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்தது.