பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் கைது!!! அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!!!

0
26
#image_title

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் கைது!!! அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!!!

கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா அவர்கள் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 2022ம் வருடம் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றில் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இதையடுத்து இலங்கை அணி நாடு திரும்ப தயாராக இருந்தது. அப்பொழுது இலங்கை அணி வீரர் தனுஷ்கா குணதிலகா அவர்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஸ்திரேலிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது அப்பொழுது கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா அவர்கள் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலமாக 29 வயதுடைய பெண்ணுடன் அறிமுகமானார். பின்னர் அந்த பெண்ணை தனுஷ்கா குணதிலகா அவர்கள் சிட்னியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தித்துள்ளார். அப்போது அந்த பெண்ணை கிரிக்கெட்டர் தனுஷ்கா குணதிலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சிட்னி காவல் துறையில் புகார் அளித்தார்.

அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிட்னி காவல் துறையினர் தாய்நாட்டுக்கு திரும்ப காத்திருந்த தனுஷ்கா குணதிலகா அவர்களை அதிரடியாக கைது செய்தது. இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் கிரிக்கெட்டர் தனுஷ்கா குணதிலகா அவர்கள் ஆணுறை இல்லாமல் அந்த பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டார் என்று பெண்ணின் சார்பில் கூறப்பட்டது. ஆனால் கிரிக்கெட்டர் தனுஷ்கா குணதிலகா அவர்களின் சார்பில் ஆஜரான வக்கீல் பெண் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது அதாவது பொய்யானது என்று தெரிவித்தார்.

இந்த வழக்கு சுமார் ஓராண்டாக நடைபெற்று வந்தது. இதையடுத்து தனுஷ்கா குணதிலகா அவர்கள் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார் என்ற வழக்கில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை தற்பொழுது வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலிய நீதிமன்றம் இது குறித்து “அந்த பெண் கிரிக்கெட்டர் தனுஷ்கா குணதிலகா அவர்களை அழைத்துள்ளார். அதனால் தான் தனுஷ்கா குணதிலகா அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். தனுஷ்கா குணதிலகா அவர்கள் குற்றம் செய்துள்ளார் என்பதை புகார் அளித்த அந்த பெண்ணின் தரப்பில் நிரூபிக்க முடியவில்லை. எனவே தனுஷ்கா குணதிலகா அவர்களின் மீது அளிக்கப்பட்ட புகாரை ரத்து செய்து அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்” என்று கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது.