வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகல் ..

Photo of author

By Parthipan K

வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் பாலா இதுதொடர்பாக படத்தின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பியதாகவும்,
ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்ற ஐயம் தற்போது தனக்கு ஏற்பட்டுள்ளது.

தம்பிக்கு ஒரு அண்ணனாக தன்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது தன் கடமையாகவும் இருக்கிறது. வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம் என்றும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது என்றும் கூறியுள்ளார்.

நந்தாவில் தான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் எனவும் இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.