நீதிபதியின் வார்த்தையால் மனமுடைந்த நடிகர் விஜய்……

0
63
Actor Vijay's lawyer marked Madras HC judge's comment on rolls rayce car case

லண்டனில் இருந்து இறக்குமதி சொந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில், நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியதாக நடிகர் விஜயின் தரப்பு கூறியுள்ளது

நடிகர் விஜய் அவர்கள் லண்டனில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்குக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பல்வேறு கருத்துகளை கூறியிருந்தார். குறிப்பாக, “நடிகர்கள் ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் அவர்கள், தான் வரி மற்றும்அபராதத் கொகையை செலுத்த தயாராக உள்ளதாகவும், தன்னை பற்றி கூறிய எதிர்மறையான கருத்துகளை நீக்கவேண்டும் என்றும், நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த போது, நடிகர் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நுழைவு வரி செலுத்தவில்லை எனவும், வரி செலுத்தாமல் இருக்க வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறுவது தேவையற்ற் கருத்து என்றும், சொந்த உழைப்பில் கார் வாங்கியிருப்பதை நீதிபதி விமர்சித்தது தேவையற்றது என்று கூறப்பட்டது. மேலும் தன்னைப்போலவே நடிகர்கள் தனுஷ் மற்றும் சூர்யாவின்வழக்குகளிலும் இதுபோன்ற கருத்துக்களை பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், சட்டத்துக்கு விரோதமாக இந்த வழக்கை தொடரவில்லை என்றும் வரிவிலக்கு கோருவது என்பது சட்டப்பூர்வமான நடவடிக்கை என்பதால் தான் தாங்கள் வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தனக்கு வரி ஏய்ப்பு செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. நிலுவைத் தொகையான ரூ. 32 லட்சத்து 30 ஆயிரத்தை, ஆகஸ்ட் 7ஆம் தேதியே செலுத்தி விட்டோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிபதி தன்னைப்பற்றி கூறிய கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது எனவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கினை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.