நடிகர் விவேக் மரணத்தில் புதிய திருப்பம்! என்ன தெரியுமா?

0
204
Actor vivek's death mystery
Actor vivek's death mystery

நடிகர் விவேக் மரணத்தில் புதிய திருப்பம்! என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் விவேக்.இவர் இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.1990களின் காலக்கட்டத்தில் இவர் துணை நடிகராக தமிழ் சினிமாவில் நடித்து வந்தார்.பின்னர் நகைச்சுவை நடிகராக நடிக்க ஆரம்பித்தார்.இவருக்கு நகைச்சுவை கதாபாத்திரம் நன்கு கைகொடுத்தது.மேலும் இவரின் பகுத்தறிவு,மூடநம்பிக்கை குறித்தான நகைச்சுவைகள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றன.

இவர் தமிழில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார்.மேலும் முன்னணி இயக்குனர்களுடனும் இவர் பணிபுரிந்துள்ளார்.இவர் சின்னக் கலைவாணர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர்.இவருடைய நகைச்சுவை அனைத்தும் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.இவர் சமூகம் சார்ந்தும் இயங்கி வந்தார்.சமூக நலனில் அக்கறை கொண்ட நடிகராக இவர் திகழ்ந்தார்.

நடிகர் விவேக் இந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி அன்று திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17ம் தேதி தனியார் மருத்துவமனையில் காலமானார்.மேலும் இவருக்கு காவல்துறை சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.அதன் பின்னர் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இவரின் மரணத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்புதான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.இந்த தடுப்பூசியால்தான் அவர் இறந்துவிட்டார் என தகவல்கள் பரவியது.இதனால் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.இந்த சம்பவத்தால் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.இந்த புகார் மனுவில் நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்தியதால்தான் இறந்து விட்டார் என குறிப்பிட்டுள்ளார் அவர்.இந்த புகார் மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் ஏற்ற்றுக் கொண்டுள்ளது.இந்த புகாருக்கான விசாரணை விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது.

Previous articleஎரித்து கொலை செய்யப்பட்ட தனியார் மருத்துவ ஊழியர்! உடன் பணி புரிந்தவரால் ஏற்பட்ட பரிதாபம்!
Next articleஇயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்! இத்தனை தயாரிப்பாளர்களா?