எரித்து கொலை செய்யப்பட்ட தனியார் மருத்துவ ஊழியர்! உடன் பணி புரிந்தவரால் ஏற்பட்ட பரிதாபம்!

0
120
Private medical employee burnt to death! Awful caused by co-worker!
Private medical employee burnt to death! Awful caused by co-worker!

எரித்து கொலை செய்யப்பட்ட தனியார் மருத்துவ ஊழியர்! உடன் பணி புரிந்தவரால் ஏற்பட்ட பரிதாபம்!

வில்லியனூர் கணுவாப்பேட்டை, முதல் வன்னியர் தெருவை சேர்ந்தவர் பாலபாஸ்கர். இவரது மனைவி ஆரோக்கியமேரி. 31 வயதான இவர் செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 19ஆம் தேதி மதியம் பணிக்குச் சென்ற அவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. எனவே இது குறித்து ஆரோக்கிய மேரியின் சகோதரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவருடன் மருத்துவமனையில் வேலை செய்த டிரைவரான அரியூரை சேர்ந்த ரமேஷ் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த 19 ஆம் தேதி இரவு வேலை முடித்து வந்த ஆரோக்கியமேரியிடம்  லிஃப்ட் கேட்பது போல நடித்து, ரமேஷ் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததோடு, 8 பவுன் தங்க நகைகளை பறித்ததும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அவரது உடலை விழுப்புரம் கொண்டு சென்று எரித்துள்ளார். அதன்  பின்னர் அங்கிருந்து இரண்டு சாக்கு மூட்டைகளில் கட்டி புதுச்சேரி அருகே உள்ள பூத்துரை பகுதியில் உள்ள முட்புதரில் வீசி சென்று விட்டார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆரோக்கிய மேரியின் உடல் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் தரப்பட்டது. ஆனால் உறவினர்கள் வாங்க மறுத்தனர். இதற்கிடையே குற்றவாளி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று அவரது உடலைப் பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்கு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சிறையில் உள்ள ரமேசை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். அவ்வாறு விசாரணை நடத்தும் போது ஆரோக்கியமேரியை கொலை செய்ய வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என்றும் கூறினார்கள்.