தனது பிறந்த நாளில் சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அமலாபால்.!!

Photo of author

By Vijay

தனது பிறந்த நாளில் சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அமலாபால்.!!

Vijay

நடிகை அமலாபால் தனது பிறந்தநாளில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து இவர் மைனா, தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி, தலைவா ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார்.

இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று நடிகை அமலாபால் 30வது பிறந்த நாளை கொண்டாடி உள்ள நிலையில், புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமலாபால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் குறைந்த பட்ஜெட் மலையாளத் திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரது முதல் தயாரிப்பு திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது ‌.

https://www.instagram.com/tv/CVfgLpKFfgh/?utm_medium=copy_link