போன் டார்ச் மூலம் பிறந்த குழந்தை! இந்த ஆட்சியிலும் இப்படி ஒரு அவலமா?

0
78
Baby born with phone torch! Is there such a tragedy in this regime as well?
Baby born with phone torch! Is there such a tragedy in this regime as well?

போன் டார்ச் மூலம் பிறந்த குழந்தை! இந்த ஆட்சியிலும் இப்படி ஒரு அவலமா?

துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா தோவினகெரேயில் அரசின் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மனைவி மங்கம்மா என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதன் காரணமாக நாகராஜ் தனது மனைவியை பிரசவத்திற்காக அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால் அந்த சமயத்தில் பலத்த கனமழை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது. மேலும் மருத்துவரும் அங்கு இல்லை என்று தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு விட்டது. அதன் காரணமாக அந்த சமயத்தில் அங்கு இருந்த செவிலியர்கள் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு அனைவரது செல்போன்களில் உள்ள டார்ச் லைட்டையும் ஆன் செய்து ஒளிர விட்டுள்ளனர்.

அதன்பின்னர் அந்த வெளிச்சத்தில் மங்காவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அவருக்கு தற்போது குழந்தை பிறந்து, அதன் பின் தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள காலகட்டத்தில் ஆட்சி மாற்றத்தின் காரணமாக மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முதல்வர் செய்து வருகிறார். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதிமுக ஆட்சியில் ஊழல்கள் பல நடைபெற்றாலும் மின்சாரம் தடைபடவே முடியவில்லை.

ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அடிக்கடி மின்சாரவெட்டு ஏற்படுவதாலும், மக்கள் மிகுந்த வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் ஆரம்ப சுகாதாரத்தில் மருத்துவரும் இல்லை. மின்சாரமும் இல்லை என்றால் அரசு எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்றும் ஒரு சில கேள்விகளை மக்கள் எழுப்பி வருகின்றனர். மேலும் இதையே அதாவது அரசை மட்டுமே நம்பி இருக்கும் பொது மக்களுக்கு அரசு ஒரு வழி செய்ய வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.