பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய வெண்பா.? வெண்பாவுக்கு பதில் இவரா.?

0
212

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய டிவிகளில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியல்களுக்கும் திரைப்படங்களைப் போன்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்று கூறலாம். தற்போது இல்லத்தரசிகள் முதல் அனைத்து வயதினர் வரை அனைவரும் ரசித்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சீரியலில் வெண்பா வுக்கும்-கண்ணம்மா வுக்கும் இடையே நடக்கும் போட்டி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பாரதிகண்ணம்மா சீரியல் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது‌.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்கிற கதாபாத்திரத்தில் ஃபரினா நடித்து வருகிறார். இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அதனால், அவருக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்க சீரியல் குழு முயற்சித்து வருகிறது. அதை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, தொகுப்பாளினி மணிமேகலை அல்லது பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத், வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. விரைவில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Previous articleஇபிஎஸ் உதவியாளர் மீது பணம் மோசடி வழக்கு! முன்னாள் முதல்வரும் இதற்கு உடந்தையா?
Next articleமாற்றுத்திறனாளியை விடாமல் துரத்திய வழிப்பறி கும்பல்! சேலத்தில் திடீர் பரபரப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here