இபிஎஸ் உதவியாளர் மீது பணம் மோசடி வழக்கு! முன்னாள் முதல்வரும் இதற்கு உடந்தையா?

0
51
Tell the people all this in the corporation election and get votes! EPS Gives Idea to Party Executives!
Tell the people all this in the corporation election and get votes! EPS Gives Idea to Party Executives!

இபிஎஸ் உதவியாளர் மீது பணம் மோசடி வழக்கு! முன்னாள் முதல்வரும் இதற்கு உடந்தையா?

பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அவ்வாறு கைப்பற்றிய முதல் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிறது. அந்த வகையில் சென்ற ஆட்சியில் ஊழல் செய்தவர்களை வெளிக்கொண்டு வந்து தற்போதைய திமுக மக்கள் முன்னிலையில் நிறுத்துகிறது. அதில் எம்ஆர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை குவித்த வழக்கில் சிக்கினார். மேலும் அவர் நேற்று ஆஜரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடர்ந்தது. அதுமட்டுமின்றி டெண்டர்களை தனக்கு சார்ந்தவர்களுக்கு கொடுத்ததாகவும் அவர் மீது வழக்குத் தொடுத்தனர். அவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி பல திடுக்கிடும் உண்மைகளை வெளிக் கொண்டு வந்தனர். அந்த வகையில் தற்பொழுது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உதவியாளர் மீது வழக்கு போட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் தான் மணி. முதல்வரின் உதவியாளர் ஆக இருப்பதால் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பேசியுள்ளார். அந்தவகையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 17 லட்சம் வாங்கியுள்ளார். இவர் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தருவதாக பலநாள் அலைக்கழித்துள்ளார். பிறகுதான் தமிழ்ச்செல்வன் நாம் ஏமாற்றம் அடைந்துவிட்டோம் என்பதை  உணர்ந்தார். தற்பொழுது போலீசாரிடம் ,17 லட்சம் வாங்கிக்கொண்டு முன்னாள் முதல்வரின் உதவியாளர் மணி என்பவர் மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் ,சேலம் மாவட்ட குற்றப்பிரிவு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெறுதல் மற்றும் பணம் வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மணி மீது வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக டிஎஸ்பி இளமுருகன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.