அம்மா வேடங்களில் கலக்கும் நடிகை கீதா!
அம்மா வேடங்களில் உணர்ச்சிபூர்வமாக நடித்து வருபவர் தான் நடிகை கீதா.
இவர் 80 கால கட்டங்களில் கவனிக்கப்பட்ட நடிகைகளில் முக்கியமானவர். அப்போது வெளியான புதுப்புது அர்த்தங்கள் திரைப்படமானது இவருக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஆனால் சமீபத்தில் இவர் பிரபல நடிகர்களுக்கு அம்மா வேடங்களில் நடித்ததால் அவர்களின் அடையாளத்துடன் கூப்பிடுவதாகவும் இவரே கூறியுள்ளார்.குறிப்பாக ஜெயம் ரவி அம்மா, விஜய் அம்மா என்று கூப்பிடும் அளவுக்கு இவரின் நடிப்பு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
கர்நாடகாவில் 1962 ஆம் ஆண்டு பிறந்த கீதா எம். பாஸ்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பைரவி திரைப்படத்தில் அறிமுகமானார்.இந்த படத்தில் டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்த அறிமுக நடிகையான கீதா, நான்கு வரி வசனம் பேசுவதற்கே தடுமாறியுள்ளார். இதனால் கடுப்பான இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தும் சூழ்நிலைக்கும் சென்றுள்ளார். பின்னர் இரண்டு இரண்டு வரிகளாக கீதாவை வசனம் பேசவைத்து படத்தை உருவாக்கியுள்ளனர் என்று கூறுகின்றனர். பைரவி திரைப்படத்தில் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். 80 கால கட்டத்தில் கவனிக்கப்பட நடிகையான இவர் ரஜினிகாந்த் மம்முட்டி இணைந்து நடித்த தளபதி திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் நடிகர் ரகுமானுக்கு மனைவியாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்றே கூறலாம்.
பெங்களூருவில் தன்னுடைய பள்ளிக் கல்வியையும் சென்னையில் தன்னுடைய கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.பைரவி திரைப்படத்தில் தன்னுடைய 16 வயதில் அறிமுகமான இவர் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தார். அதன் பின்னர் கடந்த 1997 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது நியூயார்க்கில் வசித்து வருகின்றார்.
அதன்பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவர் அம்மா வேடங்களில் கலக்கி வருகிறார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சிவகாசி மற்றும் அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட திரைப்படங்களில் அவருக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். அதே போல ஜெயம் ரவி நடித்த சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படங்களில் அவருக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.
80 களில் கே பாலச்சந்தர் மற்றும் புதுப்புது அர்த்தங்கள் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்திருந்தாலும் தற்போது விஜய் அம்மா, ஜெயம் ரவி அம்மா என்று அழைக்கும் வகையில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.