ஒரே நாடு ஒரே தேர்தல்! பாஜக-தமாகா கூட்டணி? ஜி.கே வாசன் பேட்டி!

0
180
#image_title

ஒரே நாடு ஒரே தேர்தல்! பாஜக-தமாகா கூட்டணி? ஜி.கே வாசன் பேட்டி!

பாஜக உடனான கூட்டணி குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தமாகா கட்சித் தலைவர் ஜி.கே வாசன் பேட்டியளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான களப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுகளும், தேர்தல் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லிம் லீக் கட்சி, மக்கள் நீதி மையம், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதிமுக தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக உள்ளது.

தேமுதிக அதிக இடங்களை வழங்கும் கட்சியுடன் கூட்டணி எனும் நிலைப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த தமாகா கட்சித் தலைவர் ஜி கே வாசன், ” மக்களவைத் தேர்தலின் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் வெளியாக உள்ளது. அதற்கான களப்பணிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கியுள்ளது. நவம்பர் மாதம் தொடங்கி தமாகா சார்பில் மூன்று மண்டல கூட்டங்கள் நடத்தியுள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை தமாகா ஆதரிப்பதால் அந்த ஆயத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன். பாஜக உடனான கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்தார்.

author avatar
Preethi