வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும்- நடிகை கௌதமி

Photo of author

By Anand

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும்- நடிகை கௌதமி

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பாஜக பிடிக்கும் நடிகையும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கெளதமி கூறியுள்ளார்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டியும், மத்திய அரசு மக்களுக்கு செய்து உள்ள திட்டங்களை எடுத்துக் கூறும் வகையிலும் பாஜக சார்பில் கோவையில் இருசக்கர வாகனப் பேரணி நேற்று நடைபெற்றது. அந்தப் பேரணியை நடிகையும், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினருமான கவுதமி தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியானது கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் எதிரே தொடங்கி பார்கேட், நஞ்சப்பா ரோடு அவினாசி சாலை, லட்சுமி மில்ஸ் சந்திப்பு, அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, ஆவாரம்பாளையம் சாலை வழியாக கணபதி சென்று சிவானந்தாபுரத்தில் முடிவடைந்தது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கெளதமி, பாஜக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் காணப்படுவதாகவும், நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக விற்கு அதிக அளவில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். பேரணி துவங்கம் முன்பாக மேளம் அடிக்கப்பட்டிருந்த நிலையில் திருநங்கை ஒருவர் நடனம் ஆடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.