தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
இவர், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த நானும் ரவுடிதான் படத்தில் நடித்ததில் இருந்து இருவரும் காதலர்களாக மாறினர். அதன் பிறகு இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆகி விட்டதாக நடிகை நயன்தாரா சமீபத்திய டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
தற்போது, இவர் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காற்றுவாக்கில் இரண்டு காதல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, இயக்குனர் அட்லி இந்தியில் ஷாருக்கானை வைத்து இயக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது நடிகை நயன்தாரா வெளி நிறுவன படங்களை தவிர்த்து வருகிறார். அவர் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு படங்களில் மட்டும் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். மேலும் லீட் ரோல்களில் மட்டும் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் காரணமாக நடிகை நயன்தாரா திருமணத்துக்கு தயாராகி விட்டதாக கூறுகின்றனர்