போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காத நடிகை ராகினி திவேதி! மேலும் 5 நாட்கள் காவல்நீட்டிப்பு! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Photo of author

By Parthipan K

தமிழில் ஜெயம் ரவி இருவேடங்களில் நடித்து வெளியான “ நிமிர்ந்து நில்” படத்தின் ஒரு கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை ராகினி திவேதி, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்

சில நாட்களுக்கு முன்பு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட ராகினி திரிவேதி, போலீசார் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காததால் மீண்டும் அவரை மேலும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  போலீசார் தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி, ராகினி திவேதியை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில்தான் அவரை ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்த இருப்பதாக போலீஸார் திட்டம் தீட்டி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விசாரணைக்குப் பிறகு பல திரையுலக பிரபலங்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.