நடிக்க மறுத்த ஜோதிகா! வாய்ப்பை தட்டி பறித்த ரம்யா கிருஷ்ணன்!

0
169

தெலுங்கு மாஸ் நடிகரின் திரைப்படத்தில் ஹீரோவுக்கு சகோதரியாக நடிக்கும் வாய்ப்பு ஜோதிகாவுக்கு வந்த நிலையில் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று உதறி ரம்யா கிருஷ்ணனுக்கு தாரைவார்த்த சம்பவம்தான் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

 

திருமணத்துக்குப் பிறகு சினிமா பக்கம் வராத ஜோதிகா அவர்கள் 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப்பட பயணத்தை தொடங்கினர். அதன் பிறகு தான் நடிக்கும் கதாபாத்திரங்களை மிக நேர்த்தியாக சமூக கருத்துக்களை எடுத்துச் சொல்லும் வகையில் தேர்வு செய்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது

 

இந்நிலையில் கே.ஜி.எஃப் என்ற படத்தின் மூலம் மிக பிரபலமான இயக்குநர் என்ற பெயர் பெற்றவர் பிரசாந்த் நீல். இவர் தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஜோதிகாவும் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

 

இதில் ஸ்ருதி ஹாசன் நடிகையாக பிரபாஸ்க்கு ஜோடியாகிறார். இதில் ஜோதிகா ஹீரோவின் சகோதரியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருந்தது. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படும் பொழுது அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். இதற்கு முன்பு கார்த்தி நடித்த தம்பி படத்தில் அவருக்கு அக்காவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இயக்குனர் எவ்வளவோ சொல்லியும் நடிக்க மறுத்துவிட்டாராம் ஜோதிகா. கேஜிஎஃப் படத்தில் வரும் அம்மா கதாபாத்திரத்திற்கு ஈடு இணையாக சலார் திரைப்படத்தில் வரும் சகோதரி வேடம் மிகவும் பிரபலம் அடையும் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் வாய்ப்பை வேண்டாமென்று உதறி விட்டாராம்.

 

இதனால் மிகவும் அப்செட்டான பிரசாந்த் நீல் ரம்யா கிருஷ்ணன் இருக்க நமக்கு ஏன் மற்றவர்கள் எல்லாம் என்று அவர் பக்கம் சாய்ந்துவிட்டாராம். பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிக்காட்டி இருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு இந்த பட வாய்ப்பும் பாகுபலி போன்ற மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று சொல்லியிருக்கிறார்.

 

 

 

 

 

 

 

Previous articleவங்க கடலில் உருவான புதிய புயல்! தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை!
Next articleஅதிமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய முன்னாள் அமைச்சர்!