பாவாடை தாவணியில் பட்டையை கிளப்பும் ரோஜா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!!

Photo of author

By Vijay

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், பிரபு ஆகிய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரோஜா.

தற்போது நடிகை ரோஜா ஆந்திராவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை ரோஜா நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். நடிகை ரோஜா மீண்டும் தமிழில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறிவருகின்றனர்.

நடிகை ரோஜா தன்னை வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

செல்வமணி-ரோஜா தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மேலும், அரசியலில் நுழைந்த பிறகு சினிமாவில் நடிக்காமல் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருக்கும் ரோஜா சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் பாவாடை தாவணியில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.