என்னது நடிகை சாய் பல்லவி இப்படியா கூறினார் !

0
162

நடிகைகள் என்றாலே அவர்களின் அழகு முகம் ஒரு முக்கிய கவசமாக இருக்க வேண்டும். அதனை உடைத்தெறிந்த நடிகையான சாய்பல்லவி தனது முகத்தில் உள்ள பருக்கள் காரணமாகவே பிரபலமடைந்த நடிகை. இவர் தனது முகங்களில் உள்ள பருக்களால் அழகு பெற்று ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

இவர் மலையாளத்தில் நிவின் பாலி அவர்களுடன் பிரேமம் என்னும் படத்தில் மலர் டீச்சராக வந்து தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இன்று வரை அவர் நடித்த அந்த கதாபாத்திரம் நம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது எனலாம்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் மருத்துவரும் ஆவார். விஜய் டிவியில் வெளியான நடன நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளார். இவர் தமிழில் தியா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்பு மாரி 2, என்.ஜி.கே போன்ற திரைப்படங்களில் நடித்தார். மாரி 2 படத்தில் வெளியான “ரவுடி பேபி” என்னும் பாடல் இருக்கு இவர் ஆடிய நடனம் மிகவும் வைரல் ஆகியது. இவரது நடன திறமையை அனைத்து மக்களும் பாராட்டினர்.

அவ்வகையில் இவர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தனது திருமணத்தைப் பற்றி தொகுப்பாளர் கேள்வி எழுப்பிய போது அவர் கொடுத்த பதில் சற்று அதிர்ச்சி அளித்தது.


தனக்கு திருமணமானால் தான் தன் கணவரின் வீட்டிற்கு சென்றுவிட வேண்டும். அதனால் தன்னுடைய தாய் தந்தையரையும் பிரிந்து இருக்க வேண்டும். ஆனால் எனக்கோ எனது தாய் தந்தையுடன் என் வாழ்க்கையை இறுதிவரை வாழ உள்ளேன்.

அதனால் நான் என் வாழ்வில் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எனவே நான் எனது தாய் தந்தையரை நன்றாக இறுதி வரை பார்த்துக் கொள்வேன் என்று நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார். இவரின் இத்தகைய பதில் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதோடு மட்டுமல்லாமல் பலர் அவரிடம் தங்களது முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Previous articleஅன்லாக் 4 கான வழிகாட்டுதலை வெளியிட்டது உத்தரகாண்ட் அரசு!
Next articleகோவில் குளத்தில் கலந்த விஷத்தினால் இறந்து மிதந்த மீன்கள்..! ஏலம் ரத்துதான் காரணமா..? நாகூரில் அதிர்ச்சி!