நடிகையின் வீடியோ விவகாரம்!! இனிமேல் சிறை தண்டனை தான்- சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ விவகாரத்தில் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் என்ற படத்தில் அறிமுகமாகி புஷ்பா படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ராஸ்மிகா தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்திலும், இளையதளபதி விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகை ராஸ்மிகாவின் முகத்தைக் கொண்டு சித்தரிக்கப்பட்ட ஆபாசமான போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர், whatsapp, இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாக பரவி வருகிறது. இது ராஷ்மிகாவின் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் இங்கிலாந்தில் வாழும் இந்திய பெண்மணியான ஜாரா பட்டேல் என்பவரின் முகத்தை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக ராஷ்மிகாவின் முகத்தை பொருத்தி வீடியோ வெளியிட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் பல வீடியோக்களை வெளியிட்டு புகழ்பெற்ற ஜாரா பட்டேல் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான பின்பற்றுபவர்களை கொண்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி ஜாரா பட்டேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் சில விஷமிகள் ஜாராவின் முகத்தை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக ராஷ்மிகாவின் முகத்தை பொருத்தி போலி வீடியோ தயாரித்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ பரவி வைரலான நிலையில் இத்தகைய போலி வீடியோ பரப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எச்சரித்துள்ளார்.
அதேபோல மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சகம் போலி வீடியோ தயாரித்தால் 3 ஆண்டுகள் சிறு தண்டனையும், ரூபாய் ஒரு லட்சமும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நடிகையின் வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில் மத்திய அரசு எல்லா சமூக வலைதளங்களுக்கும் இந்த எச்சரிக்கையை திருப்பித்துள்ளது.
இந்தப் போலி வீடியோ குறித்து அந்த வீடியோவுக்கு சொந்தக்காரரான ஜாரா பட்டேல் கூறுகையில்,
எனது வீடியோவில் பிரபல பாலிவுட் நடிகையின் முகத்தை போலியாக சித்தரித்து வெளியிட்ட சம்பவம் எனது கவனத்திற்கு வந்தது. நடிகையின் முகத்தையும் , எனது உடலையும் பயன்படுத்தி டீப் ஃபேக் வீடியோ தயாரித்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
மேலும் இந்த போலி வீடியோவால் என்ன நடக்கிறது என்று நான் தான் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.