திமுகவின் முக்கிய புள்ளியை அலேக்காகத் தட்டி தூக்கிய எடப்பாடியார்!! ஷாக்கில் ஸ்டாலின்!!

0
69
#image_title

திமுகவின் முக்கிய புள்ளியை அலேக்காகத் தட்டி தூக்கிய எடப்பாடியார்!! ஷாக்கில் ஸ்டாலின்!!

தமிழக அரசியலில் அனைத்து கட்சிகளையும் ஆட்டம் காண வைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பல்வேறு அதிரடி செயல்களை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அடுத்த முதல்வர் யார் என்ற அதிகாரப் போட்டி ஏற்படவே அதிமுகவில் விரிசல் ஏற்பட்டு 2 அணியாக பிரிந்தது.

எடப்பாடியார் தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தலைமையில் ஒரு அணியும் உருவானது. இதற்கிடையே எடப்பாடியார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியை பிடித்தார்.

பின்னர் எடப்பாடியார் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்திற்க்கிடையே இருந்த கருத்து முரண்பாடு நீங்கி இருவரும் இணைந்து கட்சியை வழிநடத்தி வந்தனர்.

பாஜக உடன் கூட்டணி வைத்து கடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்த அதிமுக சிறு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அதன் பின்னர் அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டுமென்று தொண்டர்கள் விரும்பி எடப்பாடி பழனிசாமி அவர்கள் அக்கட்சியின் பொதுச் செயலாளராக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நியமித்தனர்.

இதன் பின்னர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் கட்சிக்கு புறம்பாக செயல்படுகிறார் என்று அவரை அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கியது. இவ்வாறு தொடர்ந்து பல அதிரடிகளை காட்டி வந்த எடப்பாடியார் அவர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் கூட்டணியில் அங்கம் வகிப்பதாக தெரிவித்தார்.

பின்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதா குறித்து சர்ச்சையாக பேசியதால் அதிமுக – பாஜக இடையே கருத்து மோதல் வெடித்தது.

இதன் காரணமாக பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகிக் கொளவதாக அதிமுக தலைமை திட்டவட்டமாக தெரிவித்தது. அதிமுகவின் இந்த முடிவு பலருக்கும் ஷாக் அடிக்கும் நிகழ்வாக இருந்தது.

பாஜகவை விட திமுக தான் அதிர்ச்சியானது. காரணம் எடப்பாடியார் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்து விட்டதால் திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் அதிமுக பக்கம் சாய்ந்து விடுமோ என்று திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அஞ்சினர்.

பாஜக உடனான கூட்டணி முறிவிற்கு பின்னர் பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி வரும் எடப்பாடியாரால் திமுக ஆட்டம் காணத் தொடங்கி இருக்கிறது.

யாரும் யோசிக்க முடியாத பல நிகழ்வுகளை நிகழ்த்தி அதிமுகவை பலப்படுத்தி வரும் எடப்பாடியாரின் செயலைக் கண்டு பிறக் கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருவதை தொடர்ச்சியாக காண முடிகிறது.

ஏற்கனவே இரு தினங்களுக்கு முன் பாஜக ஓபிசி அணி மாநில செயலாளராக பதவி வகித்து வந்த தங்கராஜ் அவர்கள் எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.
இந்நிலையில் இன்று திமுக மீனவர் அணி துணை செயலாளர் நசரேத் பசிலியான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எடப்பாடியாரை சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத திமுக தலைமைக்கு அதிர்ச்சி தரும் தகவலாகத் தான் இருக்கும். அதுமட்டும் இன்றி திமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்காத பலரும் அதிமுகவில் இணைய உள்ளனர்.

மேலும் பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், கௌதமி உள்ளிட்டவர்களும் அதிமுகவில் இணைய உள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அதிமுக பெரும் பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்து வருகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.