சளி, காய்ச்சல், ஆஸ்துமாவை விரட்டியடிக்கும் ஆடாதோடா இலை! அட இது தெரியாமல் போச்சே…
ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல நூறு நூற்றாண்டுகளாக பல வழிகளை கண்டறிந்து தெரிவித்துள்ளனர். அந்த முறையில் மருத்துவ குணம் கொண்ட இலை தான் இந்த ஆடா தோடை இலை. இந்த இலைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இது ஆடுகள் தொடாத இலை என்பதால் இதனை ஆடாதோடை என்று சொல்கின்றனர்.
இந்தச் செடி சிறு செடியாகவும், மரமாகவும் வளரும். இதன் இலை எப்படி இருக்கும் என்றால், மாமர இலை வடிவத்தில் இருக்குமாம். இந்த இலை மருத்துவ மூலிகை செடியாகும். ஆடாதோடை செடியின் வேர், பட்டை, பூ, இலை என அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டதாம்.
இந்த இலைக்கு வைத்தியமாதா, வாசாதி, வாசை தோடை, சிங்கம் என்று பல இருக்கிறதாம்.
சரி இந்த ஆடாதோடை இலையின் மருத்துகுணத்தைப் பற்றி பார்ப்போம் –
1. ஆடாதோடை இலை சாற்றை குடித்தால், வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து விடுமாம்.
2. சீதபேதியால் அவதிப்படுபவர்கள் ஆடாதோடை இலை சாற்றை, தேனுடன் கலந்து குடித்தால் சீக்கிரமாக சீதபேதி குணமடைந்து விடும்.
3. நெஞ்சில் சளி மற்றும் உடல்வலி இருப்பவர்கள் ஆடாதோடை இலையைப் காயவைத்து பொடியாக்கி அதை கஷாயமாக காய்ச்சி குடித்து வந்தால் உடல் வலி பறந்து ஓடிவிடும்.
4. மார்புப்பகுதியில் யாருக்காவது அடிப்பட்டு விட்டால், சித்த மருத்துவர்கள் முதலுதவியாக ஆடாதோடை இலையுடன் வெற்றிலை 2 சேர்த்து கொடுப்பதால். இதை மென்று தின்னால் மார்பு வலி சரியாகிவிடும்.
5.ஆஸ்துமா, இருமல், சுரம் போன்றவற்றால் அவதியுறுபவர்கள் இந்த இலையின் சாற்றை குடித்து வந்தால் சீக்கிரம் குணமடைந்து விடுவார்கள்.
7. ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, மஞ்சள் காமாலை சரியாகும்.