மருத்துவத்துறையில் கூடுதலாக 450 எம்.பி.பி.எஸ் சீட்கள்!!

Photo of author

By CineDesk

மருத்துவத்துறையில் கூடுதலாக 450 எம்.பி.பி.எஸ் சீட்கள்!!

CineDesk

Updated on:

மருத்துவத்துறையில் கூடுதலாக 450 எம்.பி.பி.எஸ் சீட்கள்!!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கூடுதலாக 450 மருத்துவ சீட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் மற்றும் கூடுதல் இடங்கள், தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல், பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் மருத்துவ உட்கட்டமைப்பு ஆகியவற்றின் கீழ் வழங்கப்படுகின்றன.

இதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கூடுதல் இடங்களுக்காக விண்ணப்பித்தனர். இதில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டிற்கான கூடுதல்  மருத்துவ இடங்களான 450 சீட்கள் கிடைத்துள்ளன.

இதன் காரணமாக 19 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்த இடத்தின் எண்ணிக்கை 3,500 இடங்களாக அதிகரிக்கிறது. 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமாக 5,050  மருத்துவ சீட்கள் உள்ளது. இதில் ஒரு கல்லூரியில் கூட இந்த ஆண்டிற்கான மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்படவில்லை.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சென்னை கே.கே.நகர், இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன.

இதனால் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியின் மாணவர் சேர்க்கை 175 ஆக இந்தாண்டு உயர்ந்துள்ளது.

இதுபற்றி, மருத்துவ கல்வி இயக்க அதிகாரிகள் கூறியதாவது, மருத்துவத்துறையில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னதாகவே உள்ளது என்றும், அரசு மருத்துவ கல்லூரிகளில் தேவையான அளவு உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளது என்றும் கூறினர்.