அரசு பணியாளர்களின் ஓய்வூதிய தொகை கூடுதல் பிடித்தம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

அரசு பணியாளர்களின் ஓய்வூதிய தொகை கூடுதல் பிடித்தம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

அரசு பணியாளர்கள் வாங்கக் கூடிய மாத சம்பளத்தில் அவர்களின் ஓய்வூதியத் தொகைக்காக ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை பிடிப்பார்கள். அதன் பிறகு பிடித்த இந்த தொகையை அவர்கள் ஓய்வுக்கு அடுத்து ஓய்வூதியத் தொகையாக வழங்குவார்கள்.

அந்த வகையில் கடந்த 2009  ஆம் ஆண்டில் அரசு பணியாளர்களுக்கான ஊதியமானது மறு நிர்ணயம் செய்யப்பட்டது.

அப்போது ஒரு சில பணியாளர்களுக்கு ஓய்வூதியம் அதிகமாக வழங்கப்பட்டது தணிக்கை துறை ஆய்வின் மூலமாக தெரிய வந்தது. எனவே, இவ்வாறு அதிகமாக வழங்கப்பட்ட ஓய்வூதிய பணத்தை பிடிப்பது குறித்து தற்போது ஓய்வூதிய ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் கீழ் அனைவரும் செயல்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.இது குறித்து சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகளுக்கு, கருவுலக கணக்கு துறை ஆணையர் விஜயந்திர பாண்டியர் ஒரு அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதன்படி, அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு ஓய்வூதிய தொகையை பிடித்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தகவல் குறித்து சம்மந்தப்பட்ட அரசு ஊழியருக்கு கடித்தத்தின் மூலமாக விவரங்களை தெரிவித்திருக்க வேண்டும் எனவும் கூறுப்பட்டுள்ளது. இதனையடுத்து ஓய்வூதியம் அதிகமாக வழங்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

அரசுக்கு கூடுதலாக இழப்பு ஏற்படுத்தக் கூடிய கருவூல அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தான் இதற்கு பொறுப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.