செல்பி எடுக்கும் போது விபரீதம்… கேரளாவில் புதுமண தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பலி!!

0
38

 

செல்பி எடுக்கும் போது விபரீதம்… கேரளாவில் புதுமண தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பலி…

 

கேரளா மாநிலத்தில் செல்பி எடுக்க முயன்றபோது புதிதாக திருமணமான தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போதைய காலத்தில் மக்களின் மத்தியில் செல்பி எடுக்கும் பழக்கம் அதிகமாகி விட்டது. எங்கு சென்றாலும் செல்பி எடுப்பது அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் செல்பி எடுக்கும் போது பல அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றது. அந்த சமயம் மரணம் கூட ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த வகையில் கேரளா மாநிலத்தில் செல்பி எடுக்கும் பொழுது புதுமண தம்பதி ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

 

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் பாரப்பள்ளி பகுதிமில் புதிதாக திருமணமான சித்திக் மற்றும் நவுபியா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதிதாக திருமணமான சித்திக்-நவுபியா தம்பதி விருந்துக்காக பள்ளிக்கால் பகுதியில் உள்ள உறவினர் அன்சில் என்பவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

 

விருந்தை முடித்து விட்டு சித்திக் மற்றும் நவுபியா இருவரும் அன்சில் குடும்பத்தினருடன் அருகில் உள்ள ஆற்றுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது அங்கு உள்ள பாறையின் மீது நின்று செல்பி எடுக்க முயன்ற பொழுது சித்திக் மற்றும் நவுபியா இருவரும் ஆற்றுக்குள் தவறி விழுந்தனர். இதை பார்த்த அன்சில் அவர்கள் சித்திக் மற்றும் நவுபியா இருவரையும் காப்பாற்ற தானும் ஆற்றினுள் குதித்துள்ளார். ஆனால் அன்சில் அவர்களும் ஆற்றினுள் மூழ்க அங்கிருந்தவர்கள் அனைவரும் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதைப் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புத் துறையினர் ஆற்றில் விழுந்த மூவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடிய பிறகு உறவினர் அன்சில் என்பவர் பிணமாக மீட்கப்பட்டார். மேலும் நீண்ட நேரம் தேடியும் புதுமண தம்பதி சித்திக் மற்றும் நவுபியா அவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை. மேலும் இரவு அதிக நேரம் ஆனதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

 

மேலும் மறுநாள் காலையில் மீண்டும் தேடுதல் பணியை மீட்புத் துறையினர் தொடங்கினர். நேற்று(ஜூலை30) காலையில் தேடிய பொழுது சித்திக் மற்றும் நவுபியா அவர்களின் உடல்கள் பாறையின் இடுக்கில் சிக்கி இருந்தது. இதையடுத்து இருவரின் உடத்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

இதையடுத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்பி எடுக்கும் ஆசையில் புதிதாக திருமணமான தம்பதி உள்பட உறவினர் ஒருவரும் என மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.