அடேங்கப்பா… இதனால் தான் தோப்புகாரணம் போட சொல்லுறாங்களா?

0
184

அடேங்கப்பா… இதனால் தான் தோப்பு கரணம் போட சொல்லுறாங்களா?

நம் முன்னோர்கள் விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தோப்புக்கரணம் போடும்போது நமது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம்.

காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. இதனால் உடலின் உள்ள எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதலாக இருக்கிறது.

ஆனால் இன்று கடவுளுக்கு தோப்புக் கரணம் போடும் பழக்கம் தற்பொழுது வெகுவாக குறைந்து வருகிறது. பள்ளிகளில் தவறு செய்தால் வீட்டுபாடம் செய்ய தவறினாலும் ஆசிரியர்கள் கொடுக்கும் அதிகபட்ச தண்டனை தோப்புக்கரணம் போட செய்வதாகும். இவ்வாறு செய்வதால் மூளையின் நரம்புகள் தூண்டப்பட்டு ஞாபகசக்தி அதிகரிக்கும்.

தோப்புக்கரணம் உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசை இயங்க தொடங்குகிறது. சோலியஸ் தசையால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகும். காலை நேரங்களில் தோப்புக்கரணம் போட்டால் அது நமக்கு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவி புரிகிறது.

தோப்புக்கரணம் போடும் போது மூளையில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி அடைகிறது. நம்மை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

மூளையில் உள்ள வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைய உதவுகின்றது. அதுமட்டுமில்லாமல் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெற உதவுகிறது. தோப்புக்கரணம் போடுவதால் மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. நாடிகள் சுத்தம் பெறுகின்றன.

இந்த எளிமையான தோப்புக்கரணம் உடற்பயிற்சியின் மூலம் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன. நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.

Previous articleதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை மையம் அறிவிப்பு
Next articleஅதிமுவில் OPS நிலைமை அவ்வளவு தான்! முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி பழனிசாமி