தமிழகத்தில் 14 ஆயிரம் கிலோ போதை பொருள் பறிமுதல்!! ஏ.டி.ஜி.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !!
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 14 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக ஏ.டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகர் பகுதியில் சர்வதேச போதைபொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி போதை பொருள் விழிப்பு பேரணியை நடத்தினர். இதில் பல்வேறு மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என்று 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தி கொண்டிருந்தனர்.
இந்த பேரணியின் சிறப்பு விருந்தினராக போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஏ.டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால் கலந்து கொண்டார்.பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் தமிழகத்தில் போதைபொருள் தடுப்பதன் விளைவாக டி.ஜி.பி சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின் படி கஞ்சா வேட்டை என்ற பெயரில் ஆபரேஷன் ஒன்று டிசம்பர் மாதம் துவங்கப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் மொத்தம் இதுவரை 28 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.அதில் இந்த ஆண்டு மட்டும் 14 ஆயிரம் கிலோ கஞ்சா கைபற்றப்பட்டது.இதனை விற்பனை செய்த கஞ்சா வியாபாரிகளின் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பின்னர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடைய போதைபொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த போதைபொருள் பேரணி எழும்பூரில் நடைபெற்றது.
இதில் ரயில்வே போலீசார் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் இணைந்து போதை பொருள் பற்றிய விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.அதன்பின் ஏ.டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால் போதை பொருள் கடத்துவோர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.