அதிமுக முக்கிய நிர்வாகி திடீர் மரணம்!! ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணீருடன் இரங்கல்!!

Photo of author

By Jayachithra

கடலூர் மாவட்டத்தில், மங்கலம் ஒன்றியத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் மரணத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் அவர்கள் வெளியிட்ட இரங்கல் அறிவிப்பில், ‘கடலூர் மேற்கு மாவட்டம், மங்களூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவருமான கந்தசாமி அவர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்து இருக்கிறோம்.

மேலும், கழகத்தின் மீதும் தொடர்ந்து கழகத் தலைமையின் மீதும் மாறாத விசுவாசம் கொண்ட கழகப் பணிகளை திறம்பட ஆட்சி இந்த தொடக்க கால கழக உடன்பிறப்பு கந்தசாமி அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு துயரத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.மேலும், அவர் உயிரிழந்ததை தொடர்ந்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மிகவும் துன்பத்துடன் இந்த இரங்கல் செய்தியை வெளியிட்டு உள்ளனர்.

அவர்களால் இவர் மாரடைப்பால் இறந்து விட்டது என்பதை ஏற்றுக் கொள்ளவே இயலாத நிலை இருந்தாலும், அவர்கள் வருத்தத்துடன் இந்த இரங்கல் செய்தியை தெரிவித்து இருக்கின்றனர். கழகத்தின் கடின உழைப்பிற்கு இவரும் ஒரு காரணம்தான்.

மேலும், இவர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மாரடைப்பால் இருந்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.