அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா பாதிப்பு!

Photo of author

By Parthipan K

பர்கூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், அவருடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.