Help! Help! என கதறும் ஆப்கானிஸ்தான் பெண்! கண்கலங்க வைக்கும் வீடியோ!

0
77

அமெரிக்கா நாடு தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து எடுத்துக் கொண்டதில் இருந்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முடக்கியுள்ளனர். அதனால் மற்ற நாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தனது மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்து வருகிறார்கள்.

 

 

 

ஆம் பல லட்சக்கணக்கான மக்கள் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை பிடித்ததிலிருந்து அனைவரும் பயத்துடன் உள்ளனர். இந்த நாட்டை விட்டு வெளியேறலாம் என்ற அனைவரும் தவித்து வருகின்றனர். தாலிபான் அரசு மக்களுக்கு எந்தவித பாதிப்பும் நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று உறுதி கூறிய பின்னரும் மக்கள் அவர்களது பேச்சை நம்புவதாக இல்லை. மற்ற நாடுகளுக்கு சென்று விட வேண்டும் என்று மக்கள் முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். காபூல் ஏர்போட்டில் மக்கள் குவியும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

 

இந்த வீடியோ ஆப்கானிஸ்தானில் உள்ள

ஒரு பெண் காபூல் ஏர்போர்ட்டில் கதறிய வீடியோ தான் இப்பொழுது பகிரப்பட்டு வருகிறது. அந்த ஆப்கானிஸ்தானில் பெண் அங்கு உள்ள அமெரிக்க அதிகாரிகளிடம் தங்களை வெளியே செல்ல ஏர்போர்ட்க்கு உள்ளே அனுமதிக்குமாறு கெஞ்சிய வீடியோ தான் இது.

 

 

ஆனால் அமெரிக்கா அதிகாரிகள் அதை ஒப்புக் கொள்ளவே இல்லை. காபூலின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் சூழ்ந்து உள்ளது. அவர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளை வெளியேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இதற்கிடையில், சில ஆப்கானிஸ்தானில் பெண்கள் விமான நிலையத்திற்கு வந்து படையினரிடம் கெஞ்ச ஆரம்பித்தனர்.

 

அந்த வீடியோவில் ஆப்கானிஸ்தான் பெண் ஹெல்ப் ஹெல்ப் என்று கதறும் பொழுது அதை பார்த்த அனைவருக்கும் கண்ணீரை வரவழைக்கிறது. தலிபான்கள் வருகிறார்கள். அவர்கள் எங்களைக் கொன்றுவிடுவார்கள். தயவுசெய்து எங்களை உள்ளே அழைத்துச் செல்லுங்கள், பெண்கள் பிச்சை எடுப்பதுபோல அந்த அமெரிக்க அதிகாரிகளிடம் கெஞ்சுகிறார்கள்.

 

ஆனால் அமெரிக்க வீரர்கள் கதவை திறக்கவில்லை. தற்போது, 50,000 க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானர்கள் காபூல் விமான நிலையத்திற்கு அருகில் உள்ளனர். அவர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்கள். அவர்கள் நாட்டில் தங்கினால், தாலிபான்களின் கொடுமைகளை தாங்க வேண்டியிருக்கும் என்ற அச்சம் அவர்களைத் தாக்குகிறது.

 

அமெரிக்க இராணுவம் முதலில் தனது குடிமக்களை மீட்க முயற்சிக்கிறது. அதன் பிறகு, அமெரிக்காவுக்கு உதவி செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மற்ற நாடுகளும் தங்கள் குடிமக்களை மீட்கத் தொடங்கியுள்ளன. ஆனால் விமான நிலையத்தில் இன்னும் ஆப்கானியர்களின் பல்லாயிரக்கணக்கான மக்களின் கூட்டங்கள் குவிந்து கிடக்கிறது.