கிட்னி பாதித்தது என்று பயமா? இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் உடனே சரியாகும்!
கிட்னியை பாதுகாக்கும் உணவுகள் மற்றும் அதிலிருந்து கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம்
நம் உடலில் பெரும்பாலும் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய ஒரு உறுப்பு கிட்னி. அதாவது சிறுநீரகம் ஆகும் இவை பழுதடைந்து விட்டால் நம் உடலில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படும் அதனை எந்த உணவின் மூலமாக தடுக்கலாம் என்பதை காணலாம்.
நம் அன்றாடம் சமைக்க கூடிய உணவுகளில் பூண்டு அதிக எடுத்துக் கொள்வதினால் நம் உடலில் இருதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. சிறுநீரக குழாய்களில் தொற்றுக்கள் வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
சிறுநீரகங்களில் உள்ள கழிவுகளை வெளியேற்ற பெரிதும் உதவக் கூடியது கொத்தமல்லி கீரை ஆகும். ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி கீரை எடுத்து கொதிக்கும் நீரில் 10 நிமிடம் வைத்து அதனை வடிகட்டி குடித்து வர கிட்னியில் உள்ள அனைத்து டாக்ஸின்கள் வெளியேறும்.
சிறுநீரகங்களில் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு நாம் அதிகம் திராட்சை பழங்கள் உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கிறது.
இஞ்சி இதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது இவை சிறுநீரக செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது. இஞ்சியில் உள்ள சத்துக்கள் இரத்த குழாய் மற்றும் சிறுநீரக குழாய்களில் உள்ள கழிவுகளை நீக்க உதவுகிறது . ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கான உகந்த உணவு முட்டைக்கோஸ் ஆகும்.
இதில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு பயன்படுவது மட்டுமல்லாமல் பிற உறுப்புகளுக்கும் நன்மைகளை தரக்கூடியதாகவும் உள்ளது. முட்டைக்கோஸில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ் சிறுநீரகங்களில் ஏற்படக்கூடிய நீர்கட்டிகளை வராமல் தடுக்க உதவுகிறது.