2 வருடங்களுக்கு பிறகு வேறலெவலில் மாற இருக்கும் வண்டலூர் பூங்கா!! அறிமுகப்படுத்தும் சுப்பர் திட்டம்!!
தமிழகத்தில் பல சுற்றுல பயணிகள் வருகை தருகின்றனர். ஏனென்றால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அனைவரையும் திகைக்க வைக்கும் அளவிற்கு தமிழகத்தில் எண்ணில் அடங்காதா அளவிற்கு சுற்றுலா தளங்கள் உள்ளது.
அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள வண்டலூர் பூங்கா இதற்கு மட்டும் அதிக அளவில் சுற்றுல பயணிகள் வருகை தருவதற்கு காரணம் இதில் அதிக அளவில் வன உயிரினங்கள் உள்ளது.
இந்த வண்டலூர் பூங்கா இந்தியாவின் மிக பெரிய வனஉயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும்.
இது சென்னை வாசிகளுக்கு மிகவும் பிடித்த சுற்றல தளமாக அமைகின்றது. இதற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர்.
இங்கு பெரியவர்கள் அதிக நேரம் செலவிடுவது,குழந்தைகள் விளையாடுவது , இளைஞர்கள் உற்சாகத்துடன் பொழுதை கழிப்பது ,உடற்பயிற்ச்சி செய்வது போன்று மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுக்கின்றனர்.
இந்த நிலையில் கரோனா காலக்கட்டத்தில் பொதுமக்கள் யாரும் வருகை தராததால் பூங்கா பராமரிப்பு பணியின்றி மூடப்பட்டு இருந்தது.
கடந்த வாரம் இதனை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட நிலையில் சிங்க சாவரியை மேம்படுத்த நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் உள்ள சிங்கம் ,மான் போன்ற அனைத்து உயினங்களையும் பொதுமக்கள் பார்த்து ரசிக்கின்றனர். இதனை தொடர்ந்து அவைகளும் குளுகுளு என்று இருபதர்காக ஏசி வாகனங்கள் வாங்க முடிவு செய்துள்ளதாக நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பூங்காவிற்கு வார இறுதி நாட்களில் தான் அதிக அளவில் பொதுமக்கள் வருகை தருகின்றனர். இதிலும் குறிப்பாக மான் ,சங்கம், கரடி , முயல் போன்ற வன உயினங்களை பார்பதற்கு என்ற தனி பார்வையாளர்கள் கூட்டமே கூடுகின்றது.