கொரோனா பாதிக்கப்பட்டவரா? தூக்கமின்மையா? இப்படியும் இருக்கலாம்???

Photo of author

By Kowsalya

கொரோனா மனதளவில் மக்களை அதிகமாக பாதிக்கின்றது.மேலும் தன்னைப் பற்றியும் தனது அன்புக்குரியவர்களைப் பற்றிய பயம் அவர்களை ஆட்கொள்கிறது. இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தூக்கமின்மையால் அவதிப் படுகின்றனர்.

 

கொரோனா பாதிக்கப்பட்ட பின்னர் மனதளவில் மனச்சோர்வு மனப்பதற்றம் என பாதிக்கப்படுகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. உங்களுக்கும் இந்த மாதிரியான பிரச்சினைகள் இருந்தால் அதிலிருந்து எப்படி வரலாம் என்பது பற்றி பாருங்கள்.

 

1. எவ்வளவு புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லையா? உங்களுக்கு இன்சோம்னியா என்ற தூக்கமின்மை பிரச்சனைகள் வந்துள்ளது என்று அர்த்தம்.இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் உங்களுக்கு வரலாம். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் கண்டிப்பாக தூக்கம் வராது. அப்படியே தூக்கம் வந்தாலும் அடுத்த நாள் உங்களுக்கு எப்பொழுதும் புத்துணர்ச்சியாக இருக்க மாட்டீர்கள். உடல் சோர்வு, மனப் பதற்றம், குழப்பம் போன்ற மன நிலைகள் அதிகரிக்கும்.

2. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் ஏன் தூக்கமின்மை பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது. கொரோனா வரும்பொழுது ஒரு கவலை, மனப்பதற்றம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தனிமையில் இருக்கும்பொழுது தனிமையை உணரும் பொழுது இங்த மாதிரியான பிரச்சினைகள் வரலாம். மிகவும் தீவிரமான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் பொழுது அந்த பயம் தூக்கமின்மைக்கு வழி வகுக்கலாம்.

3. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குஅதன் பக்க விளைவுகளிலிருந்து மீள நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும் மற்றும் அவர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.

பின்பற்ற வேண்டிய வழிகள்:

 

1. தனிமையில் இருக்கும்பொழுது தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களை பார்ப்பதை தவிர்க்கவும். செய்திகளை பார்ப்பதையும் தவிர்க்கவும்.

2. தூங்குவதற்கு முன் ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்திற்குள் தினமும் தூங்குவதால் பயிர்ச்சி ஆகி அந்த நேரத்தில் தூக்கம் வந்துவிடும்.

3. காபி மற்றும் டீ அதிகமாக குடிப்பதால் தூக்கம் வராமல் இருக்க வழிவகுக்கும்.

4. கொரோனா இருந்தாலும் உடற்பயிற்சி போன்ற செயல் உடலுக்கு பலத்தை தரும்.

5. தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்யவும். 15 நிமிடம் தியானம் செய்யுங்கள்.