தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
101

தமிழ்நாட்டில் நாட்கள் செல்லச் செல்ல நொத்தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். ஆனாலும் இதனை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது.அதற்க்கு காரணமாக அறிவிக்கப்படுவது பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும்,இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதாலும் தான் இதனை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் 23ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் , இப்போது 31ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த முழு ஊரடங்கில் மிகப்பெரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. எந்தவிதமான தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் அவசர மருத்துவ காரணங்கள் மற்றும் உறுப்பு காரணங்களுக்காக, மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் நியாயவிலைக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் நியாயவிலைக் கடைகள் இன்று முதல் 31ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதை போலவே வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.