இந்த பொடியை சாப்பிட்ட அடுத்த 2 நிமிடத்தில் குடலில் உள்ள மொத்த கெட்ட வாயுவும் வெளியேறிவிடும்!!
மனிதர்கள் அனைவருக்கும் இருக்கக் கூடிய ஒரு பொதுவான பிரச்சனை வாயுத் தொல்லை.இவை சில சமயம் தர்ம சங்கடமான சூழலை உருவாக்கிவிடும்.உடலில் இருந்து வெளியேறும் வாயுக்கள் அதிக கெட்ட வாடை கொண்டிருந்தால் அவற்றை கட்டுப்படுத்த சில எளிய வைத்தியங்களை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
*முருங்கை கீரை – ஒரு கப்
*பிரண்டை – கால் கப்
*சீரகம் – ஒரு தேக்கரண்டி
*மிளகு – கால் தேக்கரண்டி
*கட்டி பெருங்காயம் – ஒன்று
*ஓமம் – ஒரு தேக்கரண்டி
*இந்துப்பு – அரை தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் முருங்கை கீரை மற்றும் கால் கப் பிரண்டையை வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி சீரகம்,கல் தேக்கரண்டி மிளகு,ஒரு கட்டி பெருங்காயம்,ஒரு தேக்கரண்டி ஓமத்தை போட்டு கருகிடாமல் வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இதை தட்டில் கொட்டி ஆறவையுங்கள்.அடுத்து வாணலி சூட்டில் காயவைத்த முருங்கை கீரை மற்றும் பிரண்டையை போட்டு சிறிது நேரம் வறுக்கவும்.
பின்னர் ஒரு மிக்சர் ஜாரை எடுத்து வறுத்த பொருட்களை கொட்டி அரை தேக்கரண்டி இந்துப்பு சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைக்கவும்.இந்த பொடியை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குடலில் கெட்ட வாயுக்கள் சேராமல் இருக்கும்.இந்த பொடியை வெது வெதுப்பான நீரில் கலந்தும் பருகலாம்.உணவில் பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டால் கேஸ்ட்ரிக் பிரச்சனை வராமல் இருக்கும்.
வாயுத் தொல்லைக்கு மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:
*சீரகம் – ஒரு தேக்கரண்டி
*ஏலக்காய் – ஒன்று
*பச்சை கற்பூரம் – ஒன்று
செய்முறை விளக்கம்:
அடுப்பில் வாணலி வைத்து சீரகம்,ஏலக்காய் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு இதனுடன் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பொடியில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை முழுமையாக கட்டுப்படும்.