இந்த பொருளை மூட்டை கட்டி முகர்ந்து பார்த்தால் சளி இருமல் தொல்லை இனி இல்லவே இல்லை!!

Photo of author

By Divya

இந்த பொருளை மூட்டை கட்டி முகர்ந்து பார்த்தால் சளி இருமல் தொல்லை இனி இல்லவே இல்லை!!

குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் இருமல்,சளி பிடிப்பது இயல்பான ஒரு விஷயம்.ஆனால் சிலருக்கு சளி பிடித்து விட்டால் அவை அவ்வளவு எளிதில் சரியாகி விடுவதில்லை.எந்நேரமும் மூக்கு உரிந்தபடி இருப்பதினால் நாசிக்குள் புண்கள் ஏற்பட்டு அவை தீராத தொல்லையாக மாறிவிடுகிறது.

அதேபோல் தொடர் இருமலால் தொண்டையில் எரிச்சல்,புண்கள் ஏற்பட்டு அவை மிகுந்த பாதிப்பை உண்டாக்கும்.எனவே சளி,இருமல் ஏற்பட்டால் அதனை குணப்படுத்துவதற்கான வழிகளை தேடுங்கள்.

மருந்து,மாத்திரைகளை ஒப்பிடுகையில் வீட்டு வைத்தியம் சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது.வீட்டு வைத்தியத்தில் சில கசாயம் செய்து குடிப்பார்கள்.சிலர் ஆவி பிடிப்பது,மூலிகை தேநீர் குடிப்பது போன்றவற்றின் மூலம் சளி,இருமலை குணப்படுத்திக் கொள்வார்கள்.

அந்த வகையில் சளி,இருமல் பிரச்சனையை சரி செய்ய பச்சை கற்பூரத்தை தேர்ந்தெடுப்பது நல்ல தீர்வாக இருக்கும்.

நறுமணம் மிக்க பச்சை கற்பூரம் இனிப்புகளில் சுவையை கூட்ட பயன்படுத்தப்படுகிறது.பச்சை கற்பூரம் அசுத்த காற்றை சுத்தப்படுத்தும் என்பதினால் பெருமபாலானோர் வீடுகளில் பச்சை கற்பூர கட்டி பயன்படுத்தப்படுகிறது.

சளி,இருமலை குணப்படுத்தும் பச்சை கற்பூரம்:

ஒரு காட்டன் துணியில் பச்சை கற்பூர துண்டுகளை போட்டு மூட்டை போல் கட்டிக் கொள்ளவும்.இதை மூக்கில் வைத்து நன்கு சுவாசிக்க வேண்டும்.பச்சை கற்பூரம் கரையும் வரை அவ்வப்போது நுகர்ந்து வந்தால் நாசி,தொண்டையில் படிந்து கிடந்த சளி முழுமையாக கரைந்து வெளியேறிவிடும்.

அதேபோல் ஒரு பாத்திரத்தில் 3/4 பாகம் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.பிறகு அதில் ஒரு பச்சை கற்பூர துண்டை போட்டு ஆவி பிடித்தால் சளி,இருமல் பாதிப்பு முழுமையாக நீங்கும்.

சிறிதளவு வர கொத்தமல்லி,சுக்கு,துளசி,பச்சை கற்பூரத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் சளி,இருமல் ஒரே நாளில் குணமாகிவிடும்.